பிரான்ஸில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற வந்த பாலஸ்தீன பிரபலத்தை இமானுவல் மேக்ரான் நிர்வாகம் வீட்டுக் காவலில் வைத்துள்ள நிலையில், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு
பாலஸ்தீன சமூக ஆர்வலர் Mariam Abudaqa கடந்த செப்டம்பர் மாதம் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரான்ஸ் வந்துள்ளார். இந்த நிலையில் அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் அதிரடி தாக்குதலை முன்னெடுக்க, 72 வயதான Mariam Abudaqa-வை பிரான்ஸ் நிர்வாகம் உடனடியாக வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
Mariam Abudaqa-வின் கருத்துகள் பிரான்ஸ் மக்களிடையே ஆவேசத்தை தூண்டலாம் எனவும் பொது ஒழுங்கை கடுமையாக பாதிக்கும் என்றும் உள்விவகார அமைச்சரகம் விளக்கமளித்திருந்தது.
மேலும், சமூக ஆர்வலர் Mariam Abudaqa பாலஸ்தீன விடுதலைக்கான பிரபலமான அமைப்பு ஒன்றின் உறுப்பினர் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து, பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பிரான்ஸ் விலகியிருந்தது.
அத்துடன் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை தடை செய்தல், நிகழ்வுகளை ரத்து செய்தல் மற்றும் சில பாலஸ்தீன சார்பு குழுக்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டியது.
Palestinian Activist Deportation Court Approves Credit: Alamy
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி அளிப்பதாக கூறி, இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை இதுவரை 10,000 கடந்துள்ளது.
சமூக ஆர்வலர் Mariam Abudaqa தெரிவிக்கையில், அக்டோபர் 7க்கு பின்னர் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் கொடூர தாக்குதலுக்கு தமது குடும்ப உறுப்பினர்கள் 30 பேர்களை பறிகொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில்
மேலும், தற்போதைய சூழலில் அய்யோ என்று கூட சொல்ல முடியாமல், வலியைக் கூட வெளிப்படுத்தாமல் இறக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளோம் என்றார்.
உண்மையில் பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் வியாழன் அன்று நடக்க இருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசவே பெண் உரிமை ஆர்வலரான Mariam Abudaqa பிரான்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவரது பங்கேற்பு சட்டமன்றத் தலைவரால் அக்டோபர் மாதம் முடக்கப்பட்டது. பாலஸ்தீனிய விடுதலை அமைப்பான PLO-வில் PFLP என்பது இரண்டாவது பெரிய பிரிவாகும்.
இந்த PFLP அமைப்பிலேயே Mariam Abudaqa உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பை ஐக்கிய நாடுகள் மன்றம் ஆதரித்திருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் வைத்துள்ளது.
தற்போது Mariam Abudaqa-வை நாட்டில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் ஒப்புதல் அளித்தாலும், அவர் எங்கே செல்வார் என்பதை குறிப்பிடவில்லை.
இதனிடையே, அவர் சனிக்கிழமையன்று எகிப்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும், காசாவுக்குத் திரும்புவதற்கு ரஃபா எல்லை திறக்கப்படும் வரையில் காத்திருக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரான்சில் தங்குவதை விட மரணம் மிகவும் எளிதானது என்றும் Mariam Abudaqa தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment