இங்கிலாந்து முன்னாள் பிரதமரின் அரண்மனையில் இருந்த ரூ.61 கோடி மதிப்பிலான தங்க கழிப்பறை திருடப்பட்ட விவகாரத்தில், 4 பேர் சந்தேக நபர்களாக கருதப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Gold Toilet Theft
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பபிளென்ஹெய்ம் அரண்மனையில் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை இருந்தது. இதனை இத்தாலியக் கலைஞரான மௌரிஸியோ கேட்டெலன் (Maurizio Cattelan) உருவாக்கினார்.
இதன் மதிப்பு 5.95 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.61 கோடி) ஆகும். இந்த கழிப்பறையை நியூயார்க்கிலுள்ள குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பின்பு பபிளென்ஹெய்ம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதன் பிறகு, கடந்த 2019 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கக்கழிப்பறை திருடப்பட்ட சம்பவம் நடந்தது.
நீதிமன்றத்தில் 4 பேர் ஆஜர்
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் 2021 -ம் ஆண்டு கூறுகையில், "தங்க கழிப்பறையை மீட்பதில் சிக்கல் இருக்கலாம். ஏனென்றால் இந்நேரம் கழிப்பறை உருக்கப்பட்டிருக்கலாம்" எனக் கூறினர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 35 முதல் 39 வயத்துக்குட்பட்டவர்கள்.
இதில் உள்ள 7 பேரில் 4 பேர் சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு வரும் 28 -ம் திகதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், இவர்களின் மீது கொள்ளை, சொத்துகளை மாற்ற சதி உள்ளிட்டவைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 4 ஆண்டுகள் கழித்து இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
0 comments:
Post a Comment