கனடாவில், தெருக்களில் நடமாடவே கனேடியர்கள் பயந்துபோயிருப்பதாக தெரிவித்துள்ளார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
என்ன காரணம்?
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களைத் தொடர்ந்து, பல நாடுகளில் யூதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. கனடாவில், யூத தேவாலயங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுவருகின்றன.
அத்துடன், கனடாவில், இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பும் அதிகரித்துவருகிறது.
Canadians Are Scared In Our Own Streets
இது கனேடியர்கள் அல்ல...
கனேடியர்களாகிய நாம் அப்படிப்பட்டவர்களல்ல, இப்படிப்பட்ட நிகழ்வுகளை கனடாவில் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ள ட்ரூடோ, கனேடியர்கள், நம் நாட்டு தெருக்களில் நடக்கவே பயந்துபோயிருக்கிறார்கள் என்கிறார்.
பல மில்லியன் கனேடியர்களின் பயத்தையும் வலியையும் நாம் புரிந்துகொள்ள அவர்களுக்காக நாம் நிற்கவேண்டும் என்று கூறும் ட்ரூடோ, இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க, கடின உழைப்பு தேவை என்றும் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment