கடந்த ஒரு வருடத்தில் சிறு போகத்தின்போது வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த 65,000 ஏக்கர் விவசாயிகளுக்கு பெரும்போக பருவத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை நிவாரணமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
உரம் கொள்முதல் செய்ய அரசு வழங்கும் மானியம் ரூ.15,000 மற்றும் ஒரு ஹெக்டேருக்கு இழப்பீடாக ரூ.1 இலட்சம் வழங்கப்படவுள்ளதுடன் மேலதிகமாக இந்த சலுகை வழங்கப்படுகிறது.
சீன அரசின் அன்பளிப்பு
கடந்த பருவத்தில், இலங்கையில் உள்ள விவசாயிகளுக்கு சீன அரசாங்கம் 6.5 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது.
17000 Worth Of Free Diesel To Drought Hit Farmers
எரிபொருளை பெற முன்வராத விவசாயிகள்
எனினும் பெருமளவிலான சிறுபோக நெல் விவசாயிகள் அவர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள வராததால் 02 மில்லியன் லீற்றர் டீசல் மிச்சமாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment