வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக நிதியமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (06) மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த மனு பிரதி நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டு அதிரிடம் வழங்கி வைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்!
அனைத்து அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்!
கொடுப்பனவு
மேலும், அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் வரவு செலவுத் திட்டத்தில் சில அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்வதாகக் கூறுவதாகவும் ஒரு குழு அமைச்சர்கள் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பணமில்லை என கூறுவதாகவும் இதனால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Allowance For Employees Petition To Ranil
எரிவாயு, மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு கண்டிப்பாகத் தேவைப்படுவதாக கூறிய சந்தன சூரியராச்சி, ஒரு சிறிய தொகை கொடுப்பனவாக வழங்குவதன் மூலம் இவற்றை சமாளிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment