பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் அழகாக இருக்க வேண்டுமென்பதே அவர்களின் விருப்பம்
ஆனால் முகத்தில் பல விதமாக தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் என ஏற்பட்டு முகத்தின் அழகை சீர்குழைத்து விடும்.
அதற்கு எல்லாம் தீர்வாக தான் வீட்டிலேயே எப்படி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்பை நீக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
செய்முறைகள்
முகத்தில் கரும்புள்ளியா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன் | Beauty Tips In Tamil For Face Black Marks
ஒரு கிண்ணத்தில் சந்தனம் மற்றும் பன்னீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் வெந்தயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, பின் தண்ணீரை வடிக்கட்டி அரைத்து, முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கொதிக்க வைத்த நீரால் கழுவ வேண்டும்.
சுத்தமான தேனை கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். உருளைக்கிழங்கை துருவி மிக்ஸியில் அரைத்து, அதை முகத்தில் பூசி, சாறு இறங்கியதும் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறில் சிறு பஞ்சு உருண்டையை நனைத்து முகத்தில் தடவி வர தழுப்பு நீங்கும்.
Beauty Tips In Tamil For Face Black Marks
வெங்காய சாற்றை தழும்பு உள்ள இடத்தில் பூசுவது சிறந்தது.
சோற்றுக்கற்றாழை எடுத்து அதில் உள்ள ஜெல் வடிவத்தை மட்டும் தழும்புள்ள இடத்தில் பூச வேண்டும்.
இவை எல்லாம் சருமத்தில் இருக்கும் காயங்கள், வடுக்கள், தழும்புகளை குணப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment