முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் அத்துமீறி நடப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பாடசாலை அபிவிருத்திச்சங்கம், குறிப்பிட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்யுமாறு வலயக்கல்விப் பணிமனையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த ஆசிரியர் மாணவிகளை தனது காதல் வலையில் விழுத்தி ஆபா ச குறுந்தகவல்களை மாணவிகளுக்கு அனுப்பியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
பிறந்தநாளில் கண்டோஸ் வாங்கி சென்ற மாணவியிடம் இது மட்டுமா வேறொன்றும் இல்லையா என்று குறித்த ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடக்க முற்பட்டதாக மனைவியினால் ஆசிரியைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதிபரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த அசிரியரின் ஆபா ச குறுந்தகவல்கள் தொடர்புடைய மாணவிகளினால் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டத்தை அடுத்து, ஆசிரியர்களினால் சம்பவம் தொடர்பில் அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது. இருந்தாலும், அதிபர் இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கையெடுக்கவில்லையென்பது பெற்றோரின் குற்றச்சாட்டு.
மாணவியொருவரிடம் ஆசிரியர் சட் செய்யும் போது, வீட்டில் வெள்ளைக்கோழி இருக்கிறதா என வினவியுளள்ளார்.
ஆ பாச தகவல் அனுப்பியது குறித்த ஆசிரியர் என தொடர்புடைய மாணவியினால் அதிபருக்கு எழுத்துமூல அறிவிப்பு செய்யப்பட்டதாகவும், இது குறித்து வலயக்கல்வி பணிமனையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 26.10.2023 வியாழக்கிழமை அன்று பெற்றோர்களுக்கும் , பாடசாலையின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் குறித்த ஆசிரியர் மீது பெற்றோர்களினாலும், பாடசாலையின் ஆசிரியர்களினாலும் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment