கருணாநிதி அவர்கள் தமிழை வளர்த்தார் என கூறினால் உங்களுக்கு தமிழை பற்றிய அடிப்படை அறிவு இல்லை என்பதே நிதர்சனம்.அரவாணி என்பது இழிவான சொல்லே இல்லை, அவர்களை இழிவாக எண்ணியதாலையே அலி என்பது இழிவான சொல்லாக திரிப்படைந்தது.
உதாரணத்திற்கு சில சொற்களை எடுத்துக்காட்ட முடியும். நாற்றம் என்பது வாசத்தை குறிக்கும் சொல் ஆகும் ஆனால் இன்று நாமோ நாற்றம் எனும் சொல்லை துர்நாற்றம் என்ற சொல்லுக்கு நிகராக பாவித்து வருகிறோம்.
ஆய் என்பது தாயை குறிக்கும் சொல்லாகும் காலப்போக்கில் அது அழுக்கை குறிக்கும் சொல்லாக திரிந்து சுத்தம் செய்யும் பெண்ணையும், தாயின் தாயையும் குறிக்கும் சொல்லாவாகும் திருப்படைந்துள்ளது.
அது போலவே மணம் என்ற சொல்லும், இன்றெல்லாம் மணம் என்பது துர்மணத்தை குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களை போலவே அரவாணி, அலி என்ற சொற்களை இழி சொற்களாக திருத்துவிட்டார்கள் இதற்க்கு முழு பொறுப்பும் திராவிடம் பெறுப்பேற்கவேண்டும். திராவிடத்திற்கு முந்தைய காலத்தில் அலி என்பது எவ்வாறாக பார்க்கப்பட்டது என்பதை இலக்கியங்கள் மற்றும் செய்யுள்கள் ஊடாக பாருங்கள்.
"பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க" என்று திருவாசகம் கூறுகிறது அதாவது "உலகம் பெண் ஆண் அலி என்னும் மூன்று கூறாயிருப்பதால், அவையனைத்திலும் கலந்துள்ள இறைவனை, ‘பெண் ஆண் அலியென்றும் அறிக என்கிறார். சிவனையே அலி என்று பாடும் அளவிற்கு இருந்துள்ளது என்றால் அது ஒரு இழி சொல்லாகவா இருந்திருக்கும் ??
ஆணாகிப், பெண்ணாய், அலியாகி, வேற்றுருவாய்,மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே என்று பட்டினத்தார் சிவனை சிறப்பித்துள்ளார்
தொல்காப்பியத்தில் அரவாணிகளை இரு வகையாக பிரித்து அவர்களை அழைக்கும் விதங்கள் பற்றியும் கூட தொல்காப்பியர் கூறியுள்ளார். அரவாணிகளை "பேடி" என்றும் அழைப்பர். இச் சொல்லை திருவள்ளுவரும் "”பககயத்து பபடிகக ஒவ்வாள் அகவயகத்து அஞ்சும் அவன் கள்ள நூல்" என்று தனது குறளில் குறிப்பிட்டுள்ளார் என்பது மேலும் இச் சொற்களை வலுசேர்க்கிறது.
ஒளவையார் "அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது" என்று கூறியுள்ளார். பேடு என்பது அரவாணிகளை குறிக்கும் சொல்லாகும். ஆனாலும் அவ்வாறு பிறத்தல் அரிது என்பதையும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
புறநானூறு, நாலடியார், மணிமேகலை, சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், தேவாரம் அரவாணிகள் பற்றிய குறிப்புக்கள் இருந்தே வந்துள்ளது எங்கேனும் அச் சொற்கள் இழி சொற்களாக பார்க்கப்படவில்லை.
திராவிடம் தமிழை வளர்த்த விதமும் சமூகத்தை வளர்த்த விதமும் பல சொற்களை கேலிக்குள்ளாக்கிவிட்டதுடன் அவர்களை இழிந்தவர்களாக பார்க்கும் மனநிலையை உருவாக்கிவிட்டது. அப் புள்ளியில் அரசியலை செய்த திராவிடம் திருங்கங்கை என்று ஒரு சொல்லை கொண்டுவந்து புனிதமாக்கியதாக ஏமாற்றிக்கொண்டது.
திருநங்கை என்று மாற்றியதால் சமூகத்தில் அவர்களின் பார்வை மாறியதா ? இல்லையே, பிறகு அவர் என்ன தான் சாதித்தார் ? அலிகளுக்கு புது சொற்பதம் வைத்து கருணாநிதி அவருக்கான மதிப்பை உயர்த்தினாரே தவிர திருநங்கைகளுக்கான மதிப்பை உயர்த்தவில்லை.
ஆணும், பெண்ணும் எப்படியோ அப்படியே பார்க்கப்பட்ட அலிகளை இழிந்த மக்களாக பார்க்க வைத்தது மட்டும் இன்றி "அலி, அரவாணி, பேடி, பேடு" என்ற தமிழ் சொற்களை இழி சொற்களாகவும் காட்டிக்கொண்ட திராவிடமும் அதன் ஒரு அங்கமான கருணாநிதியும் தமிழை செம்மை படுத்தினார் என்று சொன்னால், செல்பவருக்கு தமிழ் பற்றிய அடிப்படை அறிவு இல்லை என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று ஆணித்தனமாக என்னால் கூறமுடியும்.
0 comments:
Post a Comment