கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஆளுனர் ஜெர்ரி பிரவினால் நேற்று தொடக்கம் தேசிய பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 10,236 ஏக்கர் நிலப்பிற்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்த தீப்பரவல் கிலவலேன்ட் தேசிய வனாந்தரத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்திய நிலையில் அங்குள்ள மக்கள் தமது உடைமைகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட செயற்பாடே தீப்பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment