மாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மணமகன் மற்றும் மணமகள் மோட்டார் வாகனத்தில் வீட்டிற்கு அருகில் சென்ற சந்தர்ப்பத்தில் மணமகனின் நண்பர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கைக்கமைய மணமகனையும் மணமகளையும் மாட்டு வண்டியில் வைத்து தள்ளி செல்ல அனுமதிக்குமாறு நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய மணமகன் அவ்வாறு செய்துள்ளார். இந்த காட்சியை வீதியில் சென்ற குழுவினர் காணொளியாக பதிவிட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த மணமகன் காணொளி எடுத்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகனம் ஒன்றில் இருந்து காணொளி எடுத்த, தந்தை, தாய் மற்றும் மகனை, மணமகன் தாக்கியுள்ளமையினால் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த தந்தை மற்றும் மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment