நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. என்ன அதற்குள் ஹிட் என்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம், இப்படத்தை தமிழகத்தில் விற்றதே ரூ 8 கோடி வரை தான் இருக்கும் என கூறப்படுகின்றது, ஆனால், இரண்டே நாட்களில் ரூ 4 கோடி வரை இப்படத்திற்கு ஷேர் கிடைத்துவிட்டது.
அதனால், கண்டிப்பாக இப்படம் ஹிட் தான், அதே நேரத்தில் கோலமாவு கோகிலா ஒரு ஆங்கிலப்படத்தின் காப்பி என்று சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது.
ஹாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளிவந்த We're the Millers படத்தின் காப்பியே இந்த படம் என கூறுகின்றனர், அதில் ஹீரோயினுக்கு பதில் ஹீரோ பிரச்சனையில் மாட்டிக்கொள்வார், அதிலிருந்து எப்படி தப்பிக்கின்றார் என்பதே கதையாக இருந்தது.
அதை நம்ம உருக்கு ஏற்றார் போல் ஹீரோயின் என மாற்றி எடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.
0 comments:
Post a Comment