எமது உடல், தான் கடைப்பிடிக்கும் கடிகாரத்தின் படி, பகல், இரவு நேர நடக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொள்கிறது. இரவு நேரம் நம் மூளை மெலடோனை சுரக்கிறது. அதுவே உறக்கத்திற்கான ஹோர்மோன் ஆகும். நமக்கு தாலாட்டு பாடி உறங்க வைப்பது தான் மெலடோனின்.
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன், டெப்,லெப்டப் ஆகியவை அதிக வெளிச்சத்தை உமிழக் கூடியவை. அவற்றின் திரைகள் அதிகமாக ஒளிரக்கூடியவை. இரவில் அவற்றை பார்ப்பது, சூரிய ஒளி ஒரு குட்டி ஜன்னலின் வழியாக வந்தால் எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ அதுபோன்ற உணர்வை அளிக்கும்.
இரவில் பிரகாசமான வெளிச்சத்தை கண் பார்ப்பதால், மெலடோனினை சுரப்பதா வேண்டாமா? இது பகலா அல்லது இரவா என்ற குழப்பம் மூளைக்கு உருவாகி, ஹோர்மோன் உற்பத்தியில் தடுமாற்றம் உண்டாகிறது. இதனால் சரியான தூக்கம் என்பது ஒருபோதும் முழுமையாக கிடைப்பதில்லை.
அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோனை பார்த்துக் கொண்டிருப்பதால், நாம் கண்ணிமைக்கும் நேரம் குறைகிறது. அது கண்ணின் வேலைப்பளுவை அதிகரித்து, கண்ணை உலர்ந்து போகச் செய்கிறது. கண் எரிச்சல் உண்டாகிறது, கண்ணை மங்க செய்கிறது.
இரவில் உறக்கம் கெடுவதால், மறுநாள் ஞாபகசக்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன் ஸ்மார்ட் ஃபோன் பசியை உருவாக்கும் ஹோர்மோனின் உற்பத்தியையும் பாதிக்கிறது. இதன்காரணமாக உடல் பருமன் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது.
போதுமான உறக்கம் இல்லாமல் இருப்பது நாளடைவில் நரம்பு நச்சினை உருவாக்கி, நல்ல தூக்கம் என்பதை முற்றாக தடுத்து விடும்.
ஸ்மார்ட் ஃபோன் உங்கள் உறக்கத்தை கெடுக்க கெடுக்க, படிப்பதும் சிரமமாகி விடும். எனவே தயவு செய்து இரவு நேரங்களில் உங்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்தாது, நிம்மதியான உறக்கத்தை அடையுங்கள்.
0 comments:
Post a Comment