தாய்வானில் உள்ள பூங்காவில் அங்கிருக்கும் அரிய தாவர வகைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் தெரிவுபடுத்தும் செயற்பாடு இந்த மாதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் ஆர்வமுள்ள பல சுற்றுலா பிரயாணிகள் பங்குகொண்டு வருகின்றனர்.
இதில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள் அங்கே விக்டோரியா வகை இலை என கூறப்படும் லில்லி இலையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு புகைப்படம் எடுப்பதில் சிறுவர்கள் பெரியவர்கள் இளைஞர்கள் என அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன்போது லில்லி இலைகளுக்கு சேதம் ஏற்படாதவாறு பிளாஸ்ரிக் ஒன்றை இருக்கை போன்று பயன்படுத்தி ஒரு நிமிடம் உக்கார்ந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் .
அத்துடன் இந்த இலை சுமார் 65 கிலோ எடை நிறையை தாங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பாரிய லில்லி இலை அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்டு தாய்லாந்தின் பல இடங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment