பேஸ்புக் அதிபர் மார்க் ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு நாளும் ரூ. 18 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஷுக்கர்பெர்க் பொறுப்பு வகிக்கிறார்.
தற்போது அவரது தினசரி பாதுகாப்புக்காக 27 ஆயிரம் டாலர்கள் (ரூ. 18.52 லட்சம்) செலவு செய்யப்படுவதாக ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக வருடத்துக்கு ரூ. 68 கோடி வரை செலவு செய்யப்படுவதாக அந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக பேஸ்புக் நிறுவனத்தால் செலவு செய்யப்பட்ட தொகை ரூ. 50 கோடியாம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பேஸ்புக்கின் பங்குகள் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தது.
இச்சூழலில் ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக 10 மில்லியன் டாலருக்கு மேல் பேஸ்புக் நிறுவனம் செலவு செய்து இருப்பது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஷுக்கர்பெர்க்கின் போலோ எல்டோ வீட்டில் மட்டும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 16 பணியாளர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள் என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment