புளூவேலை விட மிகவும் ஆபத்தான விளையாட்டாக களம் இறங்கியுள்ளது மோமோ. அவற்றிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி?
சிறுவர்கள் அதிகம் கவனம் செலுத்துவது மொபைல்போனில் தான். புதிதாக எந்த விளையாட்டு களம் இறங்கியிருந்தாலும் நம்மை விட அதிகம் அறிந்தவர்கள் அவர்களே.
அதேபோல் தான் மோமோ சாட். விளையாட்டாக ஆரம்பித்து விபரீதமாக போய் முடியும். சிறிது நாட்கள் முன்பு புளூவேல் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களே. பலர் இவ்விளையாட்டால் இறந்து போயினர், தற்கொலை செய்து கொண்டனர்.
மோமோ என்றால் என்ன?
அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது என்பதில் ஆச்சரியம் இல்லை. அதில் வாட்ஸ்ஆப் கண்டிப்பாக இருக்கும். முதலில் வாட்ஸ்ஆப்பில் தெரியாத ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வரும். பின் அது பேச்சில் தொடர்ந்து நான் மோமோ என்று சொல்லி என் நம்பரை ஏற்றி வைத்து கொள் என்று கூறும்.
மொபைலில் அந்த நம்பரை ஏற்றிய பின் மோசமான அகோரமாக ஒரு பிரோபைல் பிக் இருக்கும். அதனை தொடர்ந்து சாதரணமான பேச்சுகள், பின் போட்டோ அனுப்பும் வரை தொடரும்.
ரகசிய தகவல்களை சேமிக்க ஆரம்பிக்கும். பதிலுக்கு மோமோவும் போட்டோக்களை அனுப்பும். அதனை டவுன்லோட் செய்தால் நம் மொபைல்யை ஹேக் செய்ய ஆரம்பிக்கும். இதன் மூலம் நமது தகவல்களை அது சேகரிக்க ஆரம்பிக்கும்.
இதனை செய்யாவிடில் நான் உன் ரகசியங்களை வெளியில் லீக் செய்து விடுவேன் என்று மிரட்ட ஆரம்பிக்கும், மன அழுத்தம் அதிமாகும். மன அழுத்தம் பின் நாளில் தற்கொலையாக மாறும்.
குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி?
மோமோ பற்றிய முழு விவரங்களையும் குழந்தைகளிடம் கூற வேண்டும். எதுவாக இருந்தாலும் பெற்றோரிடம் கூறுங்கள் என்ற தனி இடத்தை அவர்களுக்கேன ஒதுக்க வேண்டும்.
குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழியுங்கள். அவர்களை தனியாக இருக்க விடாதீர்கள். முக்கியமாக மொபைல் போன் கொடுக்காதீர்கள். சிறிது சோர்வாகி இருந்தாலும், மன உளைச்சல் அடைந்திருந்தாலும், தனியாக அமர்ந்திருந்தாலும் என்னவென்று பின் தொடருங்கள். அதனை அறிந்து தீர்வு காணுங்கள்.
வாட்ஸ் ஆப்பில் தெரியாத குரூப் அட்மின் யாராவது இருந்தால் அந்த குரூப்பில் இருந்து வெளிவந்து விடுங்கள். தெரியாத நபரிடம் சாட் செய்யாதீர்கள். அதில் இருந்து வரும் போட்டோவை டவுன்லோட் செய்யாதீர்கள்.
மொபைலில் பிரைவஸி செட்டிங்கை மாற்றி வையுங்கள். நமது நண்பர்களுக்கு மட்டும் தெரியும்படி மாற்றுங்கள். குழந்தைகள் எந்த தவறு செய்தாலும் பெற்றோர்கள் மன்னித்து விடுவார்கள் என்ற எண்ணத்தை அவர்களிடம் புகட்டுங்கள்.
காசை செலவழிப்பதை விட அன்பை செலவழியுங்கள் பெரும் பிரச்னைகளில் இருந்து குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றலாம்!
0 comments:
Post a Comment