கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.
மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று, எதையுமே விட்டு வைக்காமல் சூறையாடியுள்ளது மழையின் கோரதாண்டவம்.
யாராவது வெள்ளத்தில் சிக்கிய நம்மை காக்க வரமாட்டார்களா என்று ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் ஏங்கி தவிக்கின்றனர்.
கேரளாவில் உள்ள 39 அணைகளில் 33 அணைகளுக்கும் மேல் முழுக்கொள்ளவை எட்டி, அபாயகரமான அளவிற்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
மலைப்பாங்கான பகுதியில் உள்ள வீடுகள் நிலச்சரிவினால் இடிந்து, தினம் தினம் உயிர்பலி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெந்த புண்ணிலேயே மீண்டும் மீண்டும் வேலினை பாய்ச்சுவது போல உள்ளது கேரளா மக்களுக்கு.
பல இடங்களில் சாலை முற்றிலுமாக துண்டிகப்பட்டு உணவுக்கு கூட தள்ளாடி வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு ஆற்று பாலம் அதிவேகமாக செல்லும் வெள்ளத்தில் அடித்துச்செல்வதற்கு முன்னதாக அங்கு படம் பிடிக்கப்பட்ட இறுதி காட்சிகள் வெளியாகி மக்களிடையே மழை வெள்ளத்தின் கோரத்தன்மை குறித்த ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
0 comments:
Post a Comment