குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 6 மாத காலம் வரை கண்டிப்பாக அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பிறகு தான் குழந்தைகளுக்கு திட உணவுகளை அளிக்க தொடங்க வேண்டும்.
அந்த சமயங்களிலும் கண்டிப்பாக தாய்ப்பாலை நிறுத்தாமல் அளித்து வர வேண்டும். இந்த திட உணவு அறிமுகப்படுத்தும் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ருசியாக இருக்கும் வகையில் உணவுகளை சமைத்து, நன்கு மசித்து அளிக்க வேண்டும்.
குழந்தைகள் 10-11 மாத கால வயதினை அடையும் பொழுது பூண்டு போன்ற பலத்த உணவுகளை அறிமுகபடுத்தலாம். குழந்தைகளின் 10வது மாதம் முதல் 12 ஆம் மாதம் வரை சிறிது சிறிதாக பூண்டினை உணவில் சேர்த்து அளித்து, ஒரு வயதிற்கு பின் உணவிற்கு போதுமான அளவு பூண்டு சேர்த்த உணவுகளை குழந்தைகளுக்கு அளிக்கலாம்.
எப்படிப்பட்ட பூண்டு அளிக்க வேண்டும்?
குழந்தைகளுக்கு பச்சையான பூண்டுகளை அளிக்கக் கூடாது. மீறி அளித்தால், குழந்தைகளின் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே நன்கு சமைத்த பூண்டுகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
குழந்தைக்கு கொடுக்க சமைக்கப்படும் உணவின் சமையலுக்கு தேர்வு செய்யப்படும் பூண்டு வெண்மை நிறம் கொண்டதாக, நன்கு சாறு வளம் கொண்டதாக அதாவது ஜூஸியாக, தெளிவானதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பூண்டின் சுவை சேர்த்த உணவு பிடிக்காமல் இருந்தால், கொஞ்சம் சர்க்கரையை உணவில் சேர்த்து அளிக்கலாம், உணவு சர்க்கரை உடன் சேர்ந்து சாப்பிட பொருத்தமானதாக இருந்தால் சேர்க்கலாம்.
என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்?
பூண்டினை மேற்கூறிய முறையில் சரியாக தேர்வு செய்து, குழந்தை விரும்பக்கூடிய உணவுகளை சமைத்தல் வேண்டும். உதாரணத்திற்கு அனைத்து குழந்தைகளும் ரசம் சாதத்தை விரும்பி உண்பர்; எனவே பூண்டு நன்கு சேர்த்த ரசமாக சமைத்து குழந்தைக்கு அளிக்கலாம்.
ஏற்படும் ஒவ்வாமை ஆபத்தானதா?
பூண்டு சேர்த்த பிரட் அதாவது கார்லிக் பிரட் என்பதை பிள்ளைகளுக்கு நொறுக்குதீனியாக அளிக்கலாம். குழந்தைகளுக்கு அசைவ சுவை பிடித்திருந்தால், பூண்டு மற்றும் சிக்கன் சேர்த்த சூப் அதாவது கார்லிக் சிக்கன் சூப் தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்.
குழந்தைகளுக்கு பூண்டு சேர்த்த உணவு ஒத்துக்கொள்ளவில்லை எனில் ஒவ்வாமை அதாவது அலர்ஜி ஏற்படலாம் என்று கூறி இருந்தோம்! அது ஆபத்தானது அல்ல.
அதனால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் எவ்வித பாதிப்பும் நேராது. இருப்பினும் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்ட உடன் மருத்துவரை சந்தித்து ஒருமுறை சோதித்து, பூண்டு பற்றிய உணவு அளிப்பது குறித்து கலந்தாலோசித்து பின் தொடர்வது நல்லது.
பூண்டு தரும் பயன்கள்
குழந்தைகளுக்கு பூண்டு கலந்த உணவினை அளிப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; குழந்தைகள் பூண்டு கலந்த உணவை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் குழந்தைகளில் இருதய பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் இந்நாள் முதல் பின்னாள் வரை ஏற்படுவது தடுக்கப்படும்.
மேலும் குழந்தைகளின் வயிற்றில் ஏற்படும் புழுத்தொல்லை மற்றும் குடற்புழுக்கள் போன்றவை முற்றிலுமாக அகற்றப்படுவதற்கு பூண்டு சேர்த்த உணவு பெரிதும் உதவும். குழந்தைகளின் உடல் செயல்பாடு மேம்படவும், குழந்தைகளை நுண் உயிர் தாக்குதல் மைக்ரோ பையல் நோய் தொற்றுகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பூண்டு பெரிதும் உதவுகிறது.
0 comments:
Post a Comment