நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 13, 2018

பெண்கள் அதிக நேரம் தூங்கவில்லை என்றால் ஆபத்தாம்!



இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று தூக்கமின்மை ஆகும். அதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறையும், பணிசுமையும்தான். ஆனாலும் தூக்கமென்பது ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. தூக்கமின்மை பொதுவாகவே பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் பெண்களுக்கு தூக்கமின்மை என்பது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்கவேண்டுமெனெ உலக சுகாதர மையம் சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. அதிலும் வேளைக்கு செல்லும் பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டியது மிகவும் அவசியம். இங்கே ஆண்களை விட பெண்கள் ஏன் அதிக நேரம் தூங்கவேண்டுமென்பதை விரிவாக பார்க்கலாம்.
எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்?
சராசரி ஆணும் பெண்ணும் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்கவேண்டியது அவசியம். 64 வயதிற்கு மேலானவர்கள் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்கவேண்டும். இளம் வயதினரும் குழந்தைகளும் 9 முதல் 10 மணி நேரம் வரை தூங்கலாம். முன்பெல்லாம் தூங்கும் அளவு வயதை பொறுத்து மாறுபட்டது, ஆனால் இப்பொழுது தூங்கும்நேரம் பாலினத்தை பொறுத்தே மாறுபடுகிறது. குறைவான நேரம் தூங்குவது ஆண்களை காட்டிலும் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 
ஏன் பெண்கள் அதிக நேரம் தூங்கவேண்டும்?
ஆண்களை விட பெண்கள் குறைந்தது 20 நிமிடம் அதிகம் தூங்கவேண்டுமென ஆய்வுகள் கூறுகிறது. அவ்வாறு தூங்குவதுதான் பெண்களின் பாலியல் ஆசையை அதிகரிக்குமாம். தூக்கமின்மை இருக்கும்போது பெண்களால் கலவியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட முடியாதென மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
அதிக மனஆற்றல்
இந்த செய்தியை கேட்டு அனைத்து பெண்களும் மகிழ்ச்சியடையலாம். தேசிய தூக்க அறக்கட்டளையின் வல்லுநர்கள் கூறியிருப்பதாவது இந்த அதிக தூக்கம் பெண்களின் மனஆற்றலை அதிகரிக்கும். உன்மையில் ஆண்களை விட பெண்கள் அவர்களின் மூளையை தினமும் அதிகம் பயன்படுத்துகிறார்கள் அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதற்கு அதிக மனஆற்றல் தேவைப்படுகிறது. இதன் விளைவாக அதிக நேரம் தூங்குவது அவர்களின் மூளை விரைவில் புத்துணர்ச்சியடைய உதவும். 
போதிய தூக்கமின்மை
பெண்கள் அதிக நேரம் தூங்கவேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம் அவர்கள் தூக்கத்தின் தரம் குறைவாய் இருப்பதுதான். குறிப்பிட்ட வயதுகளில் அவர்களின் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் அவர்கள் தூக்கத்தை கெடுக்கின்றன. ஆண்களை விட பெண்களே இளவயதில் இன்சொமேனியாவால் பாதிக்கப்படுகின்றனர். இன்சொமேனியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கிட்டத்தட்ட 63% சதவீத்தினர் பெண்களே. 
மாதவிடாய்
மாதவிடாய் முன்னரும் சரி, பின்னரும் சரி பெண்கள் மிகவும் நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்கிறார்கள். மோசமான தூக்கம் இரவு நேர வியர்வை மற்றும் அதிக வலிக்கான காரணமாக இருக்கிறது. 
கர்ப்பகாலம்
ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் மனரீதியான மாற்றங்கள் பெண்களை அசௌகரியமாக உணரச்செய்யலாம். அதுமட்டுமின்றி இரவுநேர சிக்கல்கள், கை, காலில் ஏற்படும் வலி என அவர்களுக்கு தூக்கம் என்பது கனவை போல மாறிவிடும் எனவே அவர்கள் அதிகநேரம் தூங்கவேண்டியது அவசியம். 
ஆபத்துகள்
பெண்களுக்கு போதுமான தூக்கம் என்பது அவசியம். அது இல்லையெனில் அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம். குறைவான தூக்கம் பெண்களுக்கு மனஉளைச்சல், இரண்டு வகையான சர்க்கரை நோய், இதய நோய்க்கான ஆபத்தை அதிகரித்தல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. ஆண்களுக்கு அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு, அதிக இன்சுலின் சுரப்பு போன்றவற்றால் தூக்கமின்மையால் குறைவான பாதிப்பே ஏற்படுகிறது. எனவே போதிய தூக்கம் கிடைக்கும்படி பெண்கள் திட்டமிட்டு கொள்வது நல்லது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job