இன்று செல்போன் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. செல்போன்களால் பல பிரச்சினைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்பட்டுதான் வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த செல்போன் ஆட்டி படைத்து கொண்டு தான் இருக்கிறது.
இருந்தாலும் நாம் செல்போன்களை பயன்படுத்தும் முறை மட்டும் மாறவே இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறலாம். பல விதமான ஆப் கள், மற்றும் கண்ணை கவரும் கேம்கள், புகைப்படம் எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செல்பி ஆப்கள், வித விதமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் இப்படி எண்ணற்றவை மக்களை செல்போனிற்குள் இறுக்கமாக கட்டி போட்டுவிடுகிறது.
இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறையாது. தினமும் செல்போனை உங்கள் அருகில் வைத்து கொண்டு தூங்குபவரா...?
அதிக பிரைட்னஸ் வைத்து மொபைலை உபயோகிறீர்களா..?
அப்போ கட்டாயம் நீங்கள் மிக ஆபத்தான சூழலில் உள்ளீர்கள். செல்போனை ஒரு குழந்தை போல பாதுகாப்பது எத்தகைய அபத்தமான விஷயம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரேடியோ ப்ரிக்குவேன்சி...
செல்போனை அருகில் வைத்து தூங்கினால், அதில் இருந்து வரும் கதிர்கள் செல்போனுக்கு சிக்னல் தரும் இடத்தில் இருந்து வரும் ரேடியோ ப்ரிக்குவேன்சியை விட 1000 மடங்கு அதிகமானது என உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியுள்ளது. இதனால் மூளைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இந்த கதிர்களின் தாக்கத்தால் 20 முதல் 25 வருடத்திற்குள் மூளை புற்றுநோய் ஏற்பட கூடும் என சொல்கின்றனர்.
ஆண்மை குறைவு..!
இது ஆண்களுக்கு எச்சரிக்கை தர கூடிய தருணமாகத்தான் கருதப்படுகிறது. செல்போனில் வெளியாகும் கதிர்வீச்சு ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை குறைத்து ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது. அண்மையில் செய்த ஆராய்ச்சியில் செல்போன் பயன்படுத்தும் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு உள்ளதாக கண்டறிந்துள்ளனர். இது அவர்களுக்கு மலட்டு தன்மை போன்ற பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாக உள்ளது.
உங்கள் செல்போனில் சரியான அளவுதான் பிரைட்னெஸ் உள்ளதா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதிக வெளிச்சம் கொண்ட இடத்தில் மிதமான பிரைட்னஸ் இருந்தாலே கண்களுக்கு நன்மை தரும். சிலர் மொபைலில் சார்ஜ் போய்விட கூடாதென்று பிரைட்னெஸை முற்றிலுமாக குறைத்து விடுவார். இது ஒரு சில இடத்திற்கு உகந்தது. மிகவும் ஒளி குறைந்த இடத்தில பிரைட்னஸ் இருக்க வேண்டும். இல்லையேல் அதை உற்று பார்த்து பார்த்து கண்களுக்கு அதிக வலி ஏற்படுத்தும். இது பலவித கண் சார்ந்த நோய்களை உருவாக்கும்.
செல்ஃபீ எனும் எமன்..!
இன்று பெரும்பலான மக்கள் பயன்படுத்தும் வார்த்தை "செல்பி ". எங்கு சென்றாலும் எதை பார்த்தாலும் செல்பி எடுத்து கொண்டே இருப்பது. ஆனால் காரணம் இல்லாமலே செய்யும் இந்த செயல் உங்கள் மூளையை பெரிதும் பாதிக்கும். உளவியல் ரீதியாக இது அதிக மன அழுத்தத்தை தர கூடியது. பலர் செல்பி எடுக்க போய் தனது உயிரையே இழந்த கதைகளையும் நாம் அன்றாடம் கேட்டு கொண்டுதான் இருக்கின்றோம்.
இதயத்தை பாதிக்கும் செல்போன்கள்...!
ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி செல்போனால் இதயத்திற்கு கோளாறுகள் வருகிறது. நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதால் மிக விரைவிலேயே இதய நோய்கள் வருகிறதாம். செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் இதயத்தின் மென்மையான திசுக்களில் ஊடுருவி இதயத்திற்கு பாதிப்பை தருகிறது. சிலருக்கு மாரடைப்புகள் கூட இதனால் ஏற்படலாம்.
மன அழுத்தத்தின் உச்சி..!
செல்போன்கள் அதிக மன அழுத்தத்தை தருவதாக பல ஆராய்ச்சிகளும் சொல்கிறது. ஒரு நபர் சுமார் 10 மணி நேரம் ஒரு நாளைக்கு செல்போன்களுடன் நேரம் செலவிடுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் 90% பிறர் அனுப்பும் தகவல்களை நாம் மூன்றே நிமிடத்தில் படித்து விடுவதாக இதன் அறிக்கை சொல்கிறது.
விபத்து ஆபத்து...!
செல்போனால் அதிக விபத்துகள் சில ஆண்டுகளாக நடந்து கொண்டு வருகிறது என்று ஐரோப்பாவின் ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. மக்கள் செல்போன் மீது கொண்ட மோகத்தால் தங்களின் விலைமதிக்க முடியாத உயிரையே இழப்பதாக கூறுகின்றனர். மற்ற வருடங்களை காட்டிலும் இப்போதெல்லாம் 3 முதல் 4 தடவை இதன் விபத்துகளின் சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே பயணத்தின்போது செல்போன்களை தவிர்ப்பது நல்லது.
தீர்வு
எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் அதன் தாக்கம் நம்மை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்காத வகையில் இருந்தால் நமக்கு நன்மை தான். அறிவியல் எப்போதும் மனிதர்களுக்கு ஆக்கத்தை மட்டுமே தருவதாக இருத்தல் வேண்டும். நம் அழிவிற்கு அவை எப்போதும் உறுதுணையாக இருத்தல் கூடாது. செல்போனை பயன்படுத்துவர்கள் இனியாவது தேவைகேற்ப அதை பயன்படுத்துங்கள்...
0 comments:
Post a Comment