இந்தச் சஞ்சீவி மூலிகை அவ்வளவு எளிதில் கிடைக்காது.
ராஜாளி என்ற கழுகின் கண்களுக்கு மட்டும் இது எளிதில் கிடைக்கும். அந்தக் காலத்தில் இந்த மூலிகையை எடுக்க, ராஜாளி கழுகின் கூடு இருக்கும் உயரமான, யாரும் அவ்வளவு சுலபமாக ஏற முடியாத மலையில் ஏறி அந்த குகையில் உள்ள அந்த ராஜாளியின் குஞ்சுகளின் கால்களில் இரும்பு கம்பியால் கட்டிவிடுவார்களம்.
இரை தேடி சென்ற அந்த கழுகு தன் கூட்டிற்கு திரும்பியதும், தன் குஞ்சுகளின் கால்களில் உள்ள கம்பியை உடைக்க இந்த மூலிகையை, தேடி கண்டுபிடித்து எடுத்து வந்து அந்த கம்பியின் மீது அடிக்குமாம்,அப்படி இந்த மூலிகை பட்ட கம்பி உடைந்து விடுமாம்.உடனே அந்த ராஜாளி இந்த இடம் பாதுகாப்பு இல்லை என்று கருதி தன் குஞ்சிகளுடன் இன்னும் உயரமான மலைக்கு சென்றுவிடுமாம், அந்த சமயத்தில் அந்த ராஜாளியின் கூட்டை எடுத்து வந்து, ஓடும் வாய்க்கால் நீரில் போட்டாள், ராஜாளியின் கூடு நீர் போகும் வழியில் செல்லும் என்றும், இந்த மூலிகை மட்டும் இப்படி தண்ணீரை கிழித்துக்கொண்டு நீரின் எதிர் திசையில் செல்லும் என்று என் தாத்தா கூறி நான் கேட்டிருக்கிறேன்!!!
(பார்க்க :- பாதாள பைரவி படம்)
0 comments:
Post a Comment