Financial Times நாளிதழின் தலைமை நிர்வாகி தமக்குக் கிடைத்த சம்பள உயர்வுத் தொகையை நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்கவிருக்கிறார்.
திரு. ஜான் ரிட்டிங் தமக்குக் கொடுக்கப்பட்ட சுமார் 500,000 பவுண்ட் (873,960 வெள்ளி) சம்பள உயர்வு குறித்து அக்கறைகள் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
நாளிதழின் தேசிய செய்தியாளர் சங்கப் பிரதிநிதி ஸ்டீவ் பர்ட், திரு. ரிட்டிங்கின் மாதச் சம்பளமான 2.6 மில்லியன் பவுண்ட் மிக அதிகம் எனக் குறைகூறி நாளிதழ் ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாளேட்டை ஜப்பானின் நிக்கேய் நிறுவனம் வழிநடத்துகிறது.
அந்நிறுவனம் தமது ஊதியத்தை நிர்ணயிப்பதாகத் திரு. ரிட்டிங் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அது தனிநபர் செயல்திறனைப் பொறுத்தது என்றும் அவர் சொன்னார்.
எனினும் அதன் தொடர்பில் எழுந்த அக்கறைகள் காரணமாக, தமக்கு அளிக்கப்பட்ட உயர்வை நாளேட்டிலேயே மீண்டும் முதலீடு செய்வதாகச் சொன்னார் திரு. ரிட்டிங். நாளேட்டின் பெண்கள் முன்னேற்ற நிதிக்காக அதில் ஒரு பங்கு ஒதுக்கப்படும்.
பெண்களை மேலும் உயர்ந்த பதவிகளுக்கு மேம்படுத்தவும் ஆண், பெண் ஊதிய இடைவெளியைக் குறைப்பதற்கும் அது உதவும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
மீதமுள்ள தொகை நிறுவனத்தின் நிதி இலக்குகளை அடையப் பயன்படுத்தப்படும். அவரின் முடிவை வரவேற்பதாகத் தொழிற்சங்கம் தெரிவித்தது. எனினும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும்படி அது வலியுறுத்தியது.
0 comments:
Post a Comment