பேஸ்புக் ஊடாக அறிமுகமான காதலனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த யுவதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
தென்னிலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி குறித்து சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் யுவதி ஒருவர் பேஸ்புக் ஊடாக இளைஞன் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார்.
நீண்ட காலம் செல்ல முன்னர் குறித்த இளைஞனை இந்த யுவதி காதலித்துள்ளார். இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த இளைஞனை பேஸ்புக் ஊடாக மாத்திரமே தொடர்பு கொண்டுள்ளார். ஒரு போதும் அவரை நேரில் சந்தித்ததில்லை.
குறித்த இளைஞன் தன்னை ஒரு வர்த்தகர் என அறிமுகப்படுத்தியுள்ளார். அதனை தவிர வேறெந்த தகவலும் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை.
இந்நிலையில் திடீரென இந்த இளைஞனை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று யுவதிக்கு ஏற்பட்டுள்ளது. தனது தாயுடன் பேருந்தில் ஏறிய போது அந்த பேருந்து நடத்துனராக அவரது காதலன் செயற்பட்டுள்ளதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தான் வசதியானவன் என கூறி காதலன் ஏமாற்றியுள்ளார் என்பதனை அறிந்து யுவதி கடும் கோபமடைந்து அவரை விட்டு சென்றுள்ளார்.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பல யுவதிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். பலர் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment