நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 11, 2018

குள்ள மனிதர்களின் பின்னணியில் இவர்களா? விக்னேஸ்வரன் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்


குள்ள மனிதர்கள் என்பது இல்லாத விடயம். அதன் பின்னால் அரசியல் பின்னணிகள் இருகின்றன என தாம் நம்புவதாக பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெனர்ண்டோ, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளை விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குள்ள மனிதர்களை தாம் நேரில் கண்டோம் என எவரும் தம்மிடம் முறைப்பாடு செய்யவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதனால் குள்ள மனிதர்கள் தொடர்பான செய்திகள் அரசியல் பின்னணியால் உருவானது என பொலிஸார் சந்தேகிக்கின்றார்கள் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை யாழில். இடம்பெறும் மணல் கடத்தல்கள், போதை பொருள் கடத்தல்கள், வீதி விபத்துக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment