ஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி ஒருவரைக் கடித்துள்ளது. கால் முழுக்க காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஏன் இவ்வளவு மூர்க்கத்தனமாக நாய் கடித்தது என்று ஆராய்ந்து பார்த்தபோதும் குறிப்பாக நாயிற்கு ஒரு பிரச்சினையுமே இருப்பதாக தெரியவரவில்லை. வெறி நாயாக இருக்குமோ என்று சோதித்ததில் அவ்வாறான நாயும் இல்லை.
அவர் சொன்ன ஒரே ஒரு தகவல் மட்டும் நாய் ஏன் அவ்வளவு மோசமாக நடந்துகொண்டது என்பதை உணர்த்தியது.
குறித்த நபர் நாய் கடிக்க கடிக்க கடி வாங்கிக்கொண்டே ஓடியுள்ளார். இதுதான் தவறு.
நாய் விரட்டும்போது ஒருபோதுமே ஓடக்கூடாது. நாம் ஓடுவது நாய்க்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடும். வேட்டை விலங்குகள் எப்போதுமே விரட்டி விரட்டி கடிக்கும் வல்லமை படைத்தவை.
துரத்தும்போது நாம் ஓட வெளிக்கிட்டால் அது அவற்றிற்கு சாதகமாக அமைந்துவிடும். எந்தவித எதிர்ப்பும் இல்லை என்ற மனநிலையில் ஓடிவந்து கடித்துவிடும். நாயைவிட மனிதர்களால் வேகமாக ஓடமுடியாது. நாம் இரண்டு எட்டு வைப்பதற்குள் நாய் நான்கு எட்டு வைத்துவிடும்.
தவிர நாய் ஒருமுறை கடித்து இரத்த வாடையை முகர்ந்தாலே போதுமானது, அதன்பிறகு துரத்தி துரத்தி கடிக்கும். ஆக ஓடுவதால் நாயிடமிருந்து தப்ப முடியாது.
என்னதான் வழி?
நாய் கிட்ட வருகின்றது என்றதுமே நகர்வதிலிருந்து அதிரடியாக நின்றுவிடவேண்டும். கையால் அடிப்பதுபோல் ஓங்கலாம். அல்லது குனிந்து கல் எடிப்பதுபோல பாசாங்கு செய்யலாம். இவை நாயை மிரட்டுவதற்கான அடிப்படை செயன்முறைகள்.
அடுத்து நமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு நாயை நோக்கி ஓங்குவதன்மூலம் நாய் நின்ற இடம் தெரியாமல் ஓடிவிடும். இதன் பின்னரும் சரிவரவில்லையெனில் கையில் கிடப்பவற்றால் அடித்துவிடுங்கள்.
எப்போதும் பழக்கமில்லாத நாய்க்கு அருகில் செல்லும்போது ஏச்சரிக்கையுடன் செல்லவேண்டும். ஏனெனில் நாய் திடீரென்று வாய் வைத்துவிடும். சில விசர் நாய்கள் நமது எதிர்ப்பையும் மீறி எம்மை கடித்துவிடும்.
உலகில் விசர்நாய்க்கடி நோயால் வருடாவருடம் பலர் சாவடைகின்றனர். விசர்நாய்க் கடி ஏற்படுவது இதுபோன்ற கட்டாக்காலி நாய்களால்தான் என்பதை மறந்திடவேண்டாம்.
0 comments:
Post a Comment