இமோ தொழிநுட்பம் மூலம் பாதிக்கப்பட்ட யுவதி, சந்தேகநபரான இளைஞனுடன் அறிமுகமாகி உரையாடி வந்துள்ளார்.
இந்த நிலையில், இளைஞன், மீட்டியாகொடை பகுதியை சேர்ந்த யுவதியுடன் இணைந்து இமோ ஊடாக உரையாடிய யுவதியிடம் 20,000 ரூபா பணத்தை கேட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
ஐஸ் என்ற போதைப்பொருளை வாங்க வேண்டும் எனக்கூறி, இவர்கள் பணத்தை கேட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட யுவதி, அம்பாலங்கொடை பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் 10,000 ரூபாயை வைப்புச் செய்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபரான யுவதியின் தாயாரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்களான இளைஞன், தாய் மற்றும் மகள் ஆகியோரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட 22 வயதான யுவதி நீராடும் காட்சியை வெளிநாட்டில் வசிக்கும் யுவதியின் முன்னாள் காதலனே பதிவு செய்திருந்தாக கூறப்படுகிறது.
அந்த நபரே சந்தேகநபர்களுக்கு காணொளி காட்சியை அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment