நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையின் முதல் படியாக விளக்கம் கோரி பதில் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை யாழ்ப்பாண புலனாய்வு அறிந்துள்ளது.
இவ்வாறான கடிதத்தை அனுப்புவதாயின் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது பொதுவான விதி, அவ் விதி இங்கு மீறப்பட்டுள்ளது. இவ்வாறான கடிதம் எழுதுவதற்கு முன்னர் கட்சி தலைவருடன் பொதுச் செயலாளர் கலந்துரையாட வில்லை.
நடந்து முடிந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேர்தலின் பின்னர் விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது என்று எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டு வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர் இக்கடிதங்கள் அனுப்பப்பட்டமையின் பின் பெரும் ஆபத்து உள்ளதை இச் சிக்கலுக்குள் ஆக்கப்பட்டவர்களுக்கு தெரியுமோ தெரியாது.
சுமந்திரன் மன்னாரில் கடந்த வாரம் கூறினார் இன் நடவடிக்கை பற்றி இப்போது நடத்தி விட்டார்.
சுமந்திரன், சீ.வி.கே.சிவஞானம், துரைராஜசிங்கம், பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் இக் கடித வரைவில் பங்கெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 2020 பாராளுமன்ற தேர்தலின் போது எடுக்க வேண்டும் என்று மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றிய போது ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக இருந்த சீ.வி.கே. சிவஞானம் பதவியை இராஜனாமா செய்து சுமந்திரனின் விசாரணையை நீர்த்துப் போக செய்தவர்.
கட்சியால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப் பட்ட ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இணைத்தாலும் கட்சியின் செயலாளர் அவரின் வேட்பாளர் உரிமையை இரத்துச் செய்யும் அதிகாரம் உள்ளதை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் சிந்திப்பது நல்லது.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் இக்கடிதங்கள் நகர்த்தப்பட்டுள்ளமை மிக ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஆகவே சுமந்திரனின் அடுத்த திட்டமும் வெற்றி, அரசியல் அநாதைகளாக்கப் படும் சங்கூதிய சாமானுகள்.
இது போலவே வேட்பாளர் பட்டியல் அமையும் இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் இடம் பெறும், சுமந்திரனின் விருப்பப் பட்டியல் மட்டுமே தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வழங்கப்படும் யாழ்ப்பாண புலனாய்வுக்கு கிடைத்த மிக முக்கிய தகவல்.
இந்த மொக்கு மாவை பாப்பம் தம்பி, ஓ... தம்பி என கூறி தானும் அழித்து, கட்சியையும் அழித்து, தமிழ் தேசியம் என்றவர்களையும் அழிக்கப் போகிறது.
சுமந்திரன் நேற்று கூறிய கூற்று மிக முக்கியமானது, யாழ் தேர்தல் மாவட்டத்தில் நானும் சிறிதரனும் போட்டியிடுகிறோம் என்று கூறியதன் அடிப்படையில் ஆழமாக பார்த்தால் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட வரை கட்சி அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியது என முடிவெடுத்தால் கட்சியின் அங்கத்துவம் இழக்கப்படும்.
பின்னர் இப்போதைய சட்டத் திருத்தத்திற்கு அமைய கட்சியின் செயலாளர் கட்சி நீக்கிய ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதனை நிராகரிக்கிறது புதியவரின் பெயரை பரிந்துரைக்கிறோம் என தேர்தல் திணைக்களத்தை கோரினால் கட்சியின் முடிவை தேர்தல் திணைக்களம் நடைமுறைப்படுத்தும்.
அதற்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு எடுத்தால் கூட மூன்று மாதங்களுக்கு மேல் செல்லாது எனவே புதிய பாராளுமன்றத்தில் சிறிதரன் வெற்றி பெற்றால் அவரின் பாராளுமன்ற ஆயுள் வெறும் மூன்று மாதங்கள் மட்டும்.
எனவே சுமந்திரனின் ஆதரவாளர்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் இவ்வருட இறுதியில் மீளப் பெறப்பட்டு வருகின்ற தை மாதம் கட்சியின் மகாநாட்டை நடத்தி தலைவராக சுமந்திரனும் செயலாளராக சாணக்கியனும் தெரிவு செய்யப்படுவர் என யாழ்ப்பாண புலனாய்வு அறிகிறது.
இத்தனை செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்த நன்றி கடனுக்கு இம்முறை தேசிய பட்டியல் ஊடாக பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் பாராளுமன்றம் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment