நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 19, 2024

ரஸ்ய எல்லையில் படையினரால் அடித்துக் கொல்லப்பட்ட யாழ்ப்பாண ஜதுசன்!! நடந்தது என்ன?


ரஸ்ய எல்லையில் படையினரால் அடித்துக் கொல்லப்பட்ட யாழ்ப்பாண ஜதுசன்!! நடந்தது என்ன?

படையினரால்  யாழ்ப்பாண இளைஞன் அடித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த (14-10-2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று, ஐரோப்பா ரஷ்யா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் , 24 வயதான குறித்த இளைஞன் எல்லை பாதுகாப்பு படையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கடந்த வாரம் பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 24 வயதுடைய பிரஜை என அவரது சடலத்திற்கு அருகில் கிடந்த ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உயிர்ழந்தவர் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியை சேர்ந்த எஸ். ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களை கொண்டு உயிரிழந்த இளைஞன் அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment