வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம்
துயரத்தைஏற்படுத்தியுள்ளது .
ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே தீடிரென உயிரிழந்துள்ளார் .
நேற்றுமுன் தினம் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .
2> இதேவேளை யாழ் வடமராட்சி பகுதியில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அடிக்கடி சுகயீனமுற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
இந் நிலையில் நேற்றைய தினம் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார் .
நெல்லியடி செல்லமுத்தூஸ் புடவைக்கடையில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த கரவெட்டி கப்பூது பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் துசிகரன் வயது 34 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
3>
இதேவேளை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் .
பருத்தித்துறை கூவில் பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் வயது 26 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மேற்படி இளைஞர்களின் உயிரிழப்பு வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment