சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
நல்லாட்சிக் காலத்தில் மகிந்தவை திடீரென பிரதமர் ஆக்கியதும் , ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையே யார் அதிக எம்பிக்களை வைத்திருப்பது என்று போர் தொடங்கியது. எம்பிக்கள் இரண்டு பக்கத்தாலும் வாங்கப்பட்டனர்.
அப்போது வடிவேல் சுரேஸ் என்ற மலையக எம்பி மட்டும் மணித்தியாலத்திற்கு ஒருதடவை கட்சி மாறி மாறிக்கொண்டே இருந்தார். ஒருநாளுக்குள்ளேயே ரணில் பக்கம் இருந்து மகிந்த பக்கம் போய் திரும்ப ரணில் பக்கம் வந்து 3 தடவை கட்சி மாறினார். அவருடையை சாதனையை முறியடிக்க கூடிய ஆட்கள் பலர் இந்தமுறை வடகிழக்கில் எலக்ஷன் கேட்கிறார்கள்.
இந்த பெண்ணை பார்க்க இந்த ஜெனரேசன் பிள்ளை போல இருக்கு.கொஞ்சமாவது உலக விடயங்களை புரிந்து, ஒரு நாகரீகமான சமூகத்தில் எப்படி அரசியல் இருக்கும் /இருக்க வேண்டும் என்று உலக நடப்புகள்களை கற்று விட்டு வரலாமே. அந்தக்கால பூமர் போல் காலையில் ஒரு கட்சி மாலையில் ஒரு கட்சி என்று எம்ஜி ஆர் காலத்தில் இருக்காமல்.
இதுக்கும் பெண் என்றுகொண்டு எந்த வெளிநாட்டு பூமர்களும் வராதீர்கள். இங்கே விமர்சிக்கப்படுவது ஒரு இனத்தின் கேவலமான அரசியல் மட்டுமே.
0 comments:
Post a Comment