நிட்டம்புவ பொலிஸ் பகுதியில் மூன்று வயதான குழந்தையுடன், இளைஞனின் அறைக்குச் சென்ற இளம் பெண்ணொருவர் , குழந்தையை விட்டுவிட்டு இளைஞனின் கையடக்கதொலைபேசியுடன் மாயமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிட்டம்புவ பகுதியில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து இருக்கும் இளைஞன், தனிப்பட்ட தேவைக்காக கொழும்புக்கு வந்துள்ளார். இதன்போது, கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து பெண்ணொருவர் சந்தித்துள்ளார்.
இருவரும் கைத்தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக்கொண்டனர். இருவரும் சில நாட்களாக காதலித்தும் வந்துள்ளானர். பின்னர் நிட்டம்புவ, வத்துப்பிட்டிவல பகுதியில் உள்ள இளைஞனின் அறைக்கு, தனது குழந்தையுடன் கடந்த 8ஆம் திகதி சென்றுள்ளார்.
இரண்டு நாட்கள் அவ்விளைஞனுடன் தங்கியிருந்துள்ளார். இரண்டு நாட்கள் கழித்து, குழந்தையை இளைஞன் அருகில் விட்டுவிட்டு, இளைஞனின் தொலைபேசியையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டாள்.
குழந்தையை அழைத்துச் செல்ல அவர் வருவாள் என்று காத்திருந்த இளைஞன், வேலைக்குச் செல்லாமல், குழந்தையை பாதுகாத்துக்கொண்டு அறையிலேயே இருந்துள்ளார்.
இதேவேளை, அறையொன்றில், ஒரு குழந்தையும் இளைஞனும் தனியாக இருப்பதாக 119 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, பொலிஸார் குறித்த இளைஞனின் அறைக்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டபோதே விடயம் அம்பலமானது.
குழந்தையைத் விட்டுச் சென்ற நாள் முதல், பெண்ணின் கைத்தொலைபேசி வேலை செய்யவில்லை என, வாக்குமூலத்தில் இளைஞன் தெரிவித்துள்ளார்
நிட்டம்புவ, ஓர்வட்வத்த கிராமத்தை சேர்ந்த குறித்த இளைஞன், வட்டுபிட்டிவலயில் உள்ள அறையொன்றில் தங்கியிருந்த நிலையில் , குறித்த இளைஞர் அலவ்வ நகரில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment