தாமரைக் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்த மாணவி இரு மாணவர்களுடன் தொடர்பு!! பரபரப்பு தகவல்கள்!!
தாமரைக்கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி கொழும்பு 2 இல் உள்ள ஆடம்பர தொடர்மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்ட இரு மாணவர்களின் நெருங்கிய நண்பி என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பையிலிருந்து பாடசாலை காலணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவி கொழும்பு உள்ள சர்வதேச பாடசாலையில் வகுப்பில் கற்றுவந்தவர் என தெரிவித்துள்ள பொலிஸார் இந்த வருடம் ஜூலை மாதம் கொழும்பில் உள்ள ஆடம்பர தொடர்மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இரு மாணவர்களின் நெருங்கிய நண்பி இவர் என தெரிவித்துள்ளனர்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து மகள் கடும் மன அழுத்தத்தில் இருந்தார் எனநேற்று தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment