யாழில் தொடர்ந்து உறவு கொள்ள மறுத்த காதலி! காதலியின் வீடு, மோட்டார் சைக்கிள், வாகனத்தை எரித்த காதலன்!!
நேற்று இரவு 11.00 மணி அளவில் யாழ்ப்பாணம் இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், வானின் [மகேந்திரா] கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
காதலியுடன் ஏற்பட்ட ம் முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை தீ மூட்டி , முச்சக்கர வண்டி மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , வீட்டில் வசிக்கும் யுவதிக்கு இளைஞன் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் , தற்போது இருவரும் முரண்பட்டு பிரிந்து உள்ளமையால் காதலனே தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தாக்குதல் சந்தேக நபரான காதலனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment