சிறிதரன் எம்பியாக தெரிவு செய்யப்பட்டாலும் பதவியை இழப்பார்!! சுமந்திரனால் இறுக்கப்படவுள்ள ஆப்பு!! அதிர்ச்சித் தகவல்கள்
முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் அரசாங்கத்திற்கு ஆதரவாக கட்சி முடிவுக்கு மாறாக செயற்பட்டமை தொடர்பில் அவரது கட்சி உறுப்புரிமையை நீக்க ஶ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானம் எடுத்திருந்தது.
இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த வழக்கில், குறித்த முடிவுசெல்லுபடியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நசீர் அஹமட்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் தனது எம்பி
பதவியை இழந்தார். அவருக்கு பதிலாக அலி ஸாஹிர் மெளலானா, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம்
நடந்தது.
அவ்வாறே ஜக்கிய மக்கள் சக்தி அமைச்சர்களாக இருந்த ஹரின் பெர்நாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டமையால் கட்சியிலிருந்து நீக்கியது. அவர்களும் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.உயர் நீதிமன்ற தீர்ப்பு ஜக்கிய
மக்கள் சக்தியின் முடிவை உறுதிப்படுத்தியதோடு, இலங்கை தேர்தல் சட்டத்தின்படி அவர்கள் தாமாகவே பாராளுமன்றத்தில் இருந்து பதவி நீக்கம்
செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தியது. இச் சம்பவம் ஓகஸ்ட் 2024 இல் நடந்தது.
ஒருவர் அவரது கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டால் அவரை அக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் கட்சியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் நீக்கம் செய்ய முடியும். அவ்வாறு நீக்கப்படுகின்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவரது
பாராளுமன்ற பதவியும் இழக்கப்படும். அதற்கு மேற்குறிப்பிட்ட உதாரணங்கள் சாட்சி. இப்போது விடயத்திற்கு வருவோம்
தமிழரசு கட்சி தற்போது முழுக்க முழுக்க திருவாளர் சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அவரின்றி தமிழரசுக் கட்சிக்குள் அணுவும்
அசையாது என்ற யாதார்த்தமே காணப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிறேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை
மேற்கொண்டிருந்தது. ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் அதற்கு மாறாக பொதுவேட்பாளரை ஆதரித்திருந்தார். எனவே கட்சியின் தீர்மானத்தை மீறி
செயற்பட்டவர்கள் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என திரு. சுமந்திரன் அவர்களும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் திரு. சத்தியலிங்கம் அவர்களும் அறிவித்திருந்தனர். சிலருக்கு விளக்கம் கேட்டு கடிதங்களும் அனுப்பபட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் திரு. சிறிதரன் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து அவரை எம்பியாக தெரிவு செய்யத பின்னர் தமிழரசு கட்சி அவருக்கு எதிராக
ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இழக்கப்படும். இதற்கான வாய்ப்புக்களே மிக அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த தேர்தலில் திரு சிறிதரன் அவர்கள்
வென்றாலும் எம்பியாகவும் இருக்க முடியாது. தமிழரசு கட்சிக்குள்ளும் இருக்க முடியாது.
நன்றி
முருகையா தமிழ்ச்செல்வன்
0 comments:
Post a Comment