பிரித்தானியா (UK) மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளில் குழப்பநிலையை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள ரஷ்ய (Russia) உளவுத்துறை திட்டமிட்டு வருவதாக சர்வதேச ரீதியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய உளவுத்துறையின் குறித்த செயற்பாடுகள் தொடர்பில் பிரித்தானியாவின் MI5 பாதுகாப்பு சேவையின் தலைவர் கென் மெக்கலம் (Ken McCallum), பிரித்தானியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான ஆண்டறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பிரித்தானியாவில் உள்ள இடங்களில் தீ வைத்தல் உள்ளிட்ட தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ரஷ்ய உளவுத்துறை துணிந்து செயற்படுவதாக கென் குறிப்பிட்டுள்ளார்.
MI5 பாதுகாப்பு சேவை
அதேவேளை, 2022ஆம் ஆண்டு முதல் சுமார் 20 சதித்திட்டங்களை MI5 சேவை முறியடித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இணையமூடாக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இளம் வயதினர் அதிக எண்ணிக்கையில் ஈர்க்கப்படுவதாக கூறியுள்ள கென், தாக்குதல் செயற்பாடுகளுக்காக விசாரிக்கப்பட்டவர்களில் 13 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளால் உளவாளிகள் என அடையாளம் காணப்பட்ட ரஷ்ய தூதுவர்களுக்கு இராஜதந்திர விசா மறுக்கப்பட்டுள்ளதாகவும் கென் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment