நாடாளுமன்றத் தேர்தலையடுத்தே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவிக்காலம் ஐந்து வருடமா, ஒரு வருடமா இல்லை ஆறு மாதமா என உறுதிப்படுத்த முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியில் இடம்பெற்ற சிறப்பு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஜனாதிபதி மாத்திரமே உள்ளார் அவரது அரசாங்கம் இன்னும் அமையவில்லை.
இன்று எவ்வளவு அழகாக நாட்டை முன்னெடுத்து சென்றாலும் 2028 காலப்பகுதியில் பாரிய நெறுக்கடிக்கு நாம் முகக்கொடுக்க நேறிடும். எனவே, அதற்கு முன்பு நாம் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தி முடிக்க வேண்டும்.அத்தோடு, சர்வதேச நாடுகளுடன் நாம் சுமூகமாக செயற்பட வேண்டும் இல்லாவிட்டால் 2028 இல் மக்கள் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர்.ஆகையால், தற்போதிலிருந்தே நாட்டை சீரான நிலையில் கொண்டு செல்ல வேண்டும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment