நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 20, 2024

நுவரெலியா சுற்றுலா விடுதியில் 31 இளைஞர்கள் அதிரடியாக கைது | A Raid On A Tourist Resort In Nuwara Eliya


நுவரெலியா சுற்றுலா விடுதியில் 31 இளைஞர்கள் அதிரடியாக கைது
நுவரெலியாவிலுள்ள (Nuwara Eliya) சுற்றுலா விடுதியொன்றில் போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா கிரக்கரி வாவிக் கரையிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இளைஞர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கைதான இளைஞர்கள் 19 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

A Raid On A Tourist Resort In Nuwara Eliya

இந்தநிலையில், குறித்த இளைஞர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

நீதிமன்றில் முன்னிலை

அத்தோடு, கைதானவர்களை நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையிர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment