முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மத்திய கிராமத்திற்குள் மக்கள் குடியிருப்புக்குள் நேற்று இரவு புகுந்த காட்டுயானை ஒன்று மக்களின் காணிகளை சேதப்படுத்தியுள்ளது.
முள்ளியவளை மத்தி கிராமம் மக்கள் செறிந்து வாழும் கிராமமாக காணப்படுகின்றது இந்தகிராமத்திற்குள் நேற்று
07.10.24 அன்று இரவு புகுந்த காட்டுயானை கிராம வீதியால் சென்று வீடு ஒன்றின் 10 அடி நீளம் கொண்ட மதிலினை சேதப்படுத்தியுள்ளதுடன் அருகில் உள்ள வீடு ஒன்றில் உள்ள தென்னை,வாளை மரங்களை சேதப்படுத்தி விட்டு நடுக்கிராமத்துக்குள்ளால் சென்று மறுபக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளது.
இவ்வாறு கிராமத்திற்குள் யானை புகுந்துகொண்ட விடையம் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் வீதியால் யானை பயணிக்கும் போது கிராமத்தில் வீடுகளில் உள்ள நாய்கள் கூட குலைத்துக்கொள்ளாத நிலை காணப்பட்டுள்ளதை மக்கள் அவதானித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் முள்ளியவளை மத்தி கிராமத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் யானையால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் கிராம சேவையாளர் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment