நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 23, 2024

இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு | Sri Lankan Police Tighten Security


இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு
இலங்கை முழுவதும் பல பகுதிகளுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பின் பேரில், பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை

எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை 1997 இலங்கை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும் என இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், மற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு அடிக்கடி வரும் நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெலிகம, பண்டாரவளை, எல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இன்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment