முல்லைத்தீவில் சண்டையில் அங்கவீனமுற்ற முன்னாள் போராளியின் கடை தீயில் கருகியது!! ஒரு கோடிக்கு மேல் எரிந்து நாசம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவரின் பல்பொருள் வாணிபம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து கடையில் இருந்த பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளது
தனது ஒரு காலை இழந்த நிலையில் மூன்று பெண்பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் தலைவரான சிவராசா சிறீவரதன் என்ற முன்னாள் போராளியின் சிலாவத்தை சந்தியில் இருந்த யதி வானிபமே இவ்வாறு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது
இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள குறித்த பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றும் தீயில் எரிந்துகொண்டிருந்த நிலையில் குறித்த வீதி வழியாக கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வந்த அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து கடை உரிமையாளரின் வீட்டில் தெரிவித்து ஆயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும் கடையில் உள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளது.
இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னினால் ஏற்பட்ட தீயா என தெரியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்தார்
இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மின்சார சபையினர், கிளிநொச்சி தடயவியல் பொலிசார். முல்லைத்தீவு பொலிசார் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு இல்லாத நிலையில் இவ்வாறு பல கடைகள் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில் தீயணைப்பு பிரிவு ஒன்றை உருவாக்க அதிகாரரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment