நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 24, 2024

இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம்!! இரு யாழ்பாணிகள் கைது!! சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?


இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம்!! இரு யாழ்பாணிகள் கைது!! சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரை , சுன்னாகத்தில் அவரின் வீட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். மற்றையவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர், குற்றச்செயல் ஒன்றிற்காக இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்த கால பகுதியில் சிறையில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் கைதிகளுடன் தொடர்புகளை பெற்று ,  நாசகார செயலில் ஈடுபட முனைந்தார் என தெரிவிக்கப்படுகிறது

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பே பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்றைய தினம் புதன்கிழமை அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment