கனடாவில் சர்சையை ஏற்படுத்தியுள்ள சிறுவர் விளையாட்டுப் பொருளை சந்தைகளில் இருந்து மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, Fisher-Price Snuga என்ற பண்டக்குறியை கொண்ட சிறுவர் ஊஞ்சல்களே இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊஞ்சல்களை பயன்படுத்தி விளையாடிய ஐந்து சிசுக்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீள பெற்றுக் கொள்ள தீர்மானம்
இந்த இந்த ஊஞ்சல் வகைகள் ஆபத்தானவை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஊஞ்சலை பயன்படுத்திய சிசுக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகளை உறங்க வைப்பதற்காக இந்த ஊஞ்சல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இந்த ஊஞ்சல் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் சிசுக்களுக்கு பொருத்தமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
| Snuga Swing Killed 5 Babies In Canada
இந்நிலையில், இந்த சிறுவர் ஊஞ்சல்களை பயன்படுத்திய எவரும் கனடாவில் உயிரிழக்கவில்லை என கனேடிய சுகாதார நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
இருப்பினும், குறித்த சிறுவர் ஊஞ்சல்களில் காணப்படும் ஆபத்து நிலையை கருத்தில் கொண்டு கனடிய சந்தைகளில் இருந்தும் இந்த ஊஞ்சலை மீள பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த ஊஞ்சலை பயன்படுத்திய ஐந்து சிசுக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment