திரு அங்கயன் இராமநாதன்
அவர்களிடம் தன்னிடம் யாரும் கேள்விகளை முன்வைக்கலாம் என பதிவு செய்து இருக்கின்றார்
அவருக்கான சில கேள்விகள்
பாராளமன்றத்தில் பெரிதும் பங்களிக்காத ஒருவராக (Rank-215) Manthri.lk அடையாளப்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் போட்டியிடும் தேவை என்ன
கோட்டாபய ராஜபக்சவின் பொருளாதார விரோத செயல்பாடுகளுக்கும்
துணை போனது ஏன்
20 ஆம் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்
பொருளாதார சூழலை மிக பாதித்த பாராளமன்றத்தி ஜனநாயகத்திற்கு எதிராக மட்டுமன்றி அரசியலமைப்பிற்கு விரோதமாகவும் சசெயல்பட்ட பாராளமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது ஏன்
கெஹலிய ரம்புக்வெல்லக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நிகழ்நிலை காப்பு சட்டம், பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு, VAT (Standard) அதிகரித்த சட்டமூலம், Electricity bill க்கு உட்பட்ட மிக முக்கிய விவாதங்களில் மறைந்து போன மர்மம் என்ன
திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களிடம் Bar Permit பெற்றுக் கொண்டமை நியாயமானதா?
உங்கள் தந்தையாரிடம் நான்கு மதுபான சாலை அனுமதி பத்திரங்கள் இருக்கும் நிலையில் மது வியாபாரிகள் மக்கள் பிரதிநிதியாக முடியுமா
யாழ்ப்பாண பல்கலைகழக பேரவைக்கு சொந்த மச்சானையும் சித்தப்பா மகனையும் அரசியல் பின்னணியில் நியமித்தது ஏன்
தம்மிக்க பெரேராவின் DP education ஐ உங்கள் அரசியலுக்கு பயன்படுத்தி
தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தியது ஏன்
அரசாங்க அதிபராக இருந்த ஆளுநர் வேதநாயகன் உட்பட நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள் பலர் பதவிகளை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட காரணம் என்ன
வீட்டு திட்ட பயனாளர்கள் தெரிவு, ஆசிரியர் இடமாற்றங்கள், அதிபர் நிலைப்படுத்தல் நேர்முக தேர்வு, தேசிய பாடசாலையாக்கும் திட்டம் என நிர்வாக செயல்முறைகளில் தலையீடு செய்தது நியாயமானதா
அரச சார்பற்ற நிறுவன்களின் திட்ட முன்மொழிவுகளில் தலையிட்டது ஏன்
குறிப்பாக உங்கள் சகாக்களை மாத்திரம் திட்ட பயனாளிகளாக சேர்க்க வேண்டும் என நிர்ப்பந்தித்தது ஏன்
அதே போல திட்ட ஆரம்ப நிகழ்வுகளில் அழைத்து மாலை மரியாதை செய்ய வேண்டும் என்று கிராம சேவையாளர் ஊடக கட்டாயப்படுத்தியது ஏன்
அரசின் திட்டங்களின் பயனாளிகளாக சேர்த்து கொள்ளப்பட வேண்டும் என்றால் உங்கள் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என அப்பாவி பொதுமக்களை துன்புறுத்தியது ஏன்
ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்கிற அதிகாரத்தின் மூலம் உங்களின் Angajan Ramanathan Relations Officers (ARO)- மாவட்ட பொது நிர்வாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியது சரியானதா
தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அபகரித்து 100 அடி உயரத்தில் தூபி ஒன்றை கட்டுவதற்கு அனுமதி வழங்கியது ஏன்
அருண் சித்தார்த் என்கிற போதை பொருள் வியாபாரி ஒருவரை உங்கள் வேட்பாளர் பட்டியலில் சேர்ந்து கொண்டது ஏன்
சண்டிலிப்பாய், சங்கானை , சுன்னாகம் பகுதி வெட்டுக்குழுக்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சமரசங்களை ஏற்படுத்த துணை போனது ஏன்
2010 – 2013 therthalkalil துப்பாக்கி ஏந்திய உங்கள் தகப்பனாரின் வன்முறை நியாயமானதா
அரசியலை தனித்து குடும்ப வியாபாரமாக பார்க்கும் உங்களை போல ஒருவரை மக்கள் பிரதிநிதி என்ற தளத்தை பெற அனுமதிக்க முடியுமா
இன்னும் வரும்
இனமொன்றின் குரல்
0 comments:
Post a Comment