நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 13, 2024

சித்திரவதைக்குள்ளான மாற்றுத்திறனாளி சிறுமிகள்; விடுதி காப்பாளர் கைது..!


சித்திரவதைக்குள்ளான மாற்றுத்திறனாளி சிறுமிகள்; விடுதி காப்பாளர் கைது..!

அநுராதபுரம் நகரிலுள்ள விசேட பாடசாலையின் விடுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமிகளை சித்திரவதை செய்ததாக கூறப்படும் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (12.10.2024) இடம்பெற்றுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அநுராதபுர பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று இந்த காப்பாளரை கைது செய்துள்ளது.

அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜெயவீர, விடுதியில் வசிக்கும் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள ஏழு சிறுமிகளை இந்த காப்பாளர் சித்திரவதை செய்ததாக தெரிவித்தார். மேலும் சித்திரவதைக்கு உள்ளான சிறுமிகளை சட்ட வைத்தியரிடம் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment