சற்று முன் சாவகச்சேரி முன்னாள் வைத்திய அதிகாரி அர்ச்சுனா பிணையில் விடுதலை!! தேர்தலில் குதிக்கின்றார்?
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ம் திகதி உத்தரவிட்டது.
இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகளை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட அர்ச்சுனா பாராளுமன்றத் தேர்தலில் குதிக்கவுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தேர்தல் தொடர்பான தகவல் உறுதிப்படுத்த முடியவில்லை.
0 comments:
Post a Comment