நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 30, 2024

மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது மோதிய பாரம்தூக்கி: பொலிஸ் விசாரணை தீவிரம் | A Weightlifter Hit Mano Ganesan S Supporters


மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது மோதிய பாரம்தூக்கி: பொலிஸ் விசாரணை தீவிரம்
கொழும்பில் பிரசார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொது தேர்தல் வேட்பாளர் மனோ கணேசனின் வாகன சாரதி மற்றும் தற்போதைய தனிப்பட்ட பாதுகாவலர் இருவர் மீதும் பாரந்தூக்கி ஒன்று மோதியதில் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(30.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்துக்கு உள்ளான இருவரும் தற்போது கொழும்பு ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணைகள்

இந்நிலையில் விபத்து தொடர்பில் சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்குளிய பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு அதிகாரிகள் உடனடியாக பாரந்தூக்கியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலும், சாரதி பணிபுரியும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசனும் அவர் சக கொழும்பு மாவட்ட வேட்பாளர், லோஷனும் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பான ஏனைய விசாரணைகளை மட்டகுளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment