சுமந்திரனுக்கு ஆதரவாக தனது பேஸ்புக்கில் பதிவு செய்து பல லைக் வாங்கிய சுரேக்காவுக்கு எம்.பி வேட்பாளர் பதவி!!
தமிழரசுக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர் தெரிவில் சிறிதரனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சுமந்திரனின் வால் பிடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இரு பெண்கள் அதில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் . அவர்களில் ஒருவர் சுரேக்கா சுசீந்திரன். இவர் பேஸ்புக்கில் பல நாட்களாக சுமந்திரனுக்கு ஆதரவாக சண்டை பிடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணுரிமை தொடர்பாக பல பதிவுகளை பேஸ்புக்கில் இட்டு பெருமளவு லைக் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. சுரேக்கா சுமந்திரனின் ஆதரவாளர் என்றந நிலைக்கு அப்பால் துணிச்சலான செயற்பாடுகளை மேற்கொள்வதில் ஆண்களுக்கு நிகரானவர் என்பதும், சுமந்திரனின் ஆதரவாளராக மாறுவதற்கு முன் சைக்கிள் கட்சி ஆதரவாளராகவும் அதன் பின் சைக்கிள் கட்சியிலிருந்து பிரிந்த மணிவண்ணனின் ஆதரவாளராகவும் பேஸ்புக்கில் பதிவுகள் இட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவியான சுரேக்கா யாழ் மாநகரசபை, கோப்பாய் பிரதேசசபை, நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை போன்றவற்றில் முகாமைத்துவ அலுவலராகப் பணியாற்றியதுடன் சட்டமும் பயின்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய பெண்களைப் போல் அல்லாது அரசியல் ஆர்வம் கொண்டவராகவும் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகும் தன்மை கொண்டவராக இருந்தாலும் 100 வாக்கை தான்டுவாரோ என்பது சந்தேகம் தான்!
0 comments:
Post a Comment