நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 26, 2018

அரசியல் கைதிகளென்று சிறையில் எவருமில்லை!


“பாரதூரமான மனித படுகொலைகளைச் செய்தவர்களையும் அரசியல் தலைவர்களைக் கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் எனக் கூறுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள, “எம்மைப் பொறுத்தவரை அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலையில் இல்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது தண்டனை உறுதியாகியுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் நேற்றுக் கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதிப் பொறிமுறைக்கு அப்பால் இவர்களை விடுதலை செய்ய மாற்று வழிமுறை இருந்தால் தமிழ்த் தலைமைகள் அதனை எமக்குக் கூறுங்கள். அது சாத்தியம் என்றால் கைதிகளை விடுதலை செய்ய முழுமையான ஒத்துழைப்பைத் தருகின்றோம்” – என்றார்

0 comments:

Post a Comment