நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 4, 2018

பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண்ணுக்கு வீதியில் காத்திருந்த பேரதிர்ச்சி


செவனகல – வெலியார ,
   
       
   
  கிரிவெவ பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இரண்டு பேர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் செவனகல காவல்துறையால் கைது செய்யப்பட்டு எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய வேளையே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 48 வயதான பெண்ணொருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் வந்த இரண்டு பேர் குறித்த பெண்ணை வீதிக்கு அருகில் இருந்த கால்வாய் ஒன்றுக்கு இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது அந்த பெண் கூச்சலிட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு பிரதேசவாசிகள் விரைந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில்,
   
       
   
  மற்றைய சந்தேக நபரை பிரதேசவாசிகள் மடக்கி பிடித்து அவர்கள் வந்த உந்துருளியுடன் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

தப்பியோடிய சந்தேக நபர் பெண்ணின் தங்க சங்கிலியையும் அறுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், அதே பகுதியை சேர்ந்த 32 வயதான நபர் என்பதுடன், தப்பியோடிய சந்தேக நபரை தேடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

0 comments:

Post a Comment