நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 14, 2018

‘ஆவா’ உறுப்பினர்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி?


வடக்கு மாகாணத்தில் இயங்கிவரும் “ஆவா” குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவாக, யாழ்ப்பாணம் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆயுதப் பயிற்சியானது,

   
       
   
  இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படுவதாகவும், இதற்காக, ஆவா குழுவால், கொடுப்பனவொன்றும் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தனியார் நிறுவனத்துக்கான கொடுப்பனவைச் செலுத்துவதற்குத் தேவையான பயணத்தைச் சேகரிப்பதற்காக, “ஆவா குரூப்” உறுப்பினர்களைக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்பணத்தைக் கொண்டு, அக்குழுவைச் சேர்ந்த 12 பேர், இந்தியாவில் தற்போது ஆயுதப் பயிற்சியைப் பெற்று வருவதாகவும், அந்தத் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ,

   
       
   
  இவ்வாறான தகவலொன்று, தமது பொலிஸ் பிரிவுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் “ஆவா” குழுவை இல்லாதொழிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும், இந்நாள்களில் முன்னெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment