நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 18, 2018

வைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்!!



வைரமுத்து மற்றும் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் சின்மயிக்கு அவருடைய கணவர் ராகுல் ரவீந்திரன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார்.

14 வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்த போது தன்னை தனியாக அறைக்கு வர சொன்னார் என்று கூறினார். 

இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. 

அதனை தொடர்ந்து, பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீற்ல்களை சின்மயி மூலமாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சின்மயிக்கு பலத்த ஆதரவும் கடுமையான எதிர்ப்பும் சேர்ந்தே வருகிறது. 

இது சம்மந்தமாக கடந்த தினத்தில் சின்மயியின் அம்மா தொலைக்காட்சிகளில் தோன்றி சின்மயி கூறுவது உண்மை என விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100 சதவீதம் உண்மை என சின்மயின் கணவர் ராகுல் கூறியுள்ளார். “அவர் என்னிடம் இந்த விடயத்தை சொல்லவே அதிகம் தயங்கினார்” என ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன் ஒரு ஆணாக தன் செய்கையால் தெரிந்தோ தெரியாமலோ எந்த பெண்ணாவது தவறாக எடுத்துக்கொண்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் வைரமுத்துவுக்கு நெருக்கமான சிலர் இது ஆண்டாள் விவகாரத்துக்கான பழிவாங்கும் நடவடிக்கை என கூறி வருகின்றனர்.

0 comments:

Post a Comment